10th Maths Unit 6 Important 5 Marks Questions | முக்கோணவியல்

10ஆம் வகுப்பு கணிதம் முக்கோணவியல் (Trigonometry) அலகு 6-ல் உள்ள முக்கியமான 5 மதிப்பெண் கேள்விகள். பொதுத்தேர்வில் முழு மதிப்பெண் பெற உடனே பயிற்சி

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் கடினமாக கருதப்படும் முக்கோணவியல் பகுதியை எளிதாக வெல்ல, 10th Maths Unit 6 (முக்கோணவியல்) பிரிவில் உள்ள மிக முக்கியமான 5 மதிப்பெண் கேள்விகள் இங்கே தமிழ் வழியில் (Tamil Medium) தொகுக்கப்பட்டுள்ளன. முக்கோணவியல் முற்றொருமைகளை நிரூபித்தல், மற்றும் ஏற்றக்கோணம், இறக்கக்கோணங்களைப் பயன்படுத்தி உயரங்கள் மற்றும் தொலைவுகளைக் கணக்கிடும் அன்றாட வாழ்க்கைக் கணக்குகள் போன்ற பொதுத்தேர்வில் அடிக்கடி கேட்கப்படும் 5-மதிப்பெண் வினாக்கள் இதில் விரிவாக விளக்கப்பட்டுள்ளன. கொடுக்கப்பட்டுள்ள சூத்திரங்களையும் வடிவங்களையும் தெளிவாகப் புரிந்து பயிற்சி செய்து, கணிதத் தேர்வில் உங்களது முழு மதிப்பெண் இலக்கை எளிதில் அடையுங்கள்!


10th Maths Unit 6 Important 5 Marks Questions | முக்கோணவியல்

UNIT - 6 (முக்கோணவியல்)

UNIT - 6 (TRIGONOMETRY)
(IMPORTANT FIVE MARKS QUESTIONS)

1. sin2A cos2B + cos2A sin2B + cos2A sin2B + cos2A cos2B + sin2A sin2B = 1 என நிறுவுக.

2. cosec θ + cot θ = P எனில், cos θ = (P2 - 1)/(P2 + 1) என நிரூபிக்கவும்.

3. (1 + cot A + tan A)(sin A - cos A)/(sec3A - cosec3A) = sin2A cos2A என நிறுவுக.

4. √3 sin θ - cos θ = 0 எனில், tan 3θ = (3 tan θ - tan3θ)/(1 - 3 tan2θ) எனக் காட்டுக.

5. cos θ/(1 + sin θ) = 1/a எனில், (a2 - 1)/(a2 + 1) = sin θ என்பதை நிரூபிக்கவும்.

6. cot θ + tan θ = x மற்றும் sec θ - cos θ = y எனில், (x2y)2/3 - (xy2)2/3 = 1 என நிரூபிக்கவும்.

7. இரு கப்பல்கள் கலங்கரை விளக்கத்தின் இரு பக்கங்களிலும் கடலில் பயணம் செய்கின்றன. இரு கப்பல்களிலிருந்து கலங்கரை விளக்கத்தின் உச்சியின் ஏற்றக்கோணங்கள் முறையே 30° மற்றும் 45° ஆகும். கலங்கரை விளக்கத்தின் உயரம் 200 மீ எனில், இரு கப்பல்களுக்கு இடையே உள்ள தொலைவைக் காண்க. (√3 = 1.732)

8. தரையின்மீது ஒரு புள்ளியிலிருந்து 30 மீ உயரமுள்ள கட்டடத்தின் மேலுள்ள ஒரு கோபுரத்தின் அடி மற்றும் உச்சியின் ஏற்றக்கோணங்கள் முறையே 45° மற்றும் 60° எனில், கோபுரத்தின் உயரத்தைக் காண்க. (√3 = 1.732)

9. ஒருவர் அவருடைய வீட்டிற்கு வெளியில் நின்றுகொண்டு ஒரு ஜன்னலின் உச்சி மற்றும் அடி ஆகியவற்றை முறையே 60° மற்றும் 45° ஆகிய ஏற்றக்கோணங்களில் காண்கிறார். அவரின் உயரம் 180 செ.மீ மேலும் வீட்டிலிருந்து 5 மீ தொலைவில் அவர் உள்ளார் எனில், ஜன்னலின் உயரத்தைக் காண்க. (√3 = 1.732)

10. 1.6 மீ உயரமுள்ள சிலை ஒன்று பீடத்தின் மேல் அமைந்துள்ளது. தரையிலுள்ள ஒரு புள்ளியிலிருந்து 60° ஏற்றக்கோணத்தில் சிலையின் உச்சி அமைந்துள்ளது. மேலும் அதே புள்ளியிலிருந்து பீடத்தின் உச்சியானது 40° ஏற்றக்கோணத்தில் உள்ளது எனில், பீடத்தின் உயரத்தைக் காண்க. (tan 40° = 0.8391, √3 = 1.732)

11. 15 மீ உயரமுள்ள ஒரு கோபுரம் உள்ளது. ஒரு மின் கம்பத்தின் அடி மற்றும் உச்சியிலிருந்து கோபுரத்தின் உச்சியை முறையே 60°, 30° என்ற ஏற்றக்கோணங்களில் பார்த்தால் மின் கம்பத்தின் உயரத்தைக் காண்க.

12. 50 மீ உயரமுள்ள ஒரு கோபுரத்தின் உச்சியிலிருந்து ஒரு மரத்தின் உச்சி மற்றும் அடி ஆகியவற்றின் இறக்கக்கோணங்கள் முறையே 30° மற்றும் 45° எனில், மரத்தின் உயரத்தைக் காண்க. (√3 = 1.732)

13. ஒருவர், கோபுரத்திலிருந்து விலகி கடலில் சென்று கொண்டிருக்கும் படகு ஒன்றை, கோபுரத்தின் உச்சியிலிருந்து பார்க்கிறார். கோபுரத்தின் அடியிலிருந்து 200 மீ தொலைவில் படகு இருக்கும்போது, படகை அவர் 60° இறக்கக்கோணத்தில் காண்கிறார். 10 வினாடிகள் கழித்து இறக்கக்கோணம் 45° ஆக மாறுகிறது எனில், படகு செல்லும் வேகத்தினைத் (கி.மீ/மணியில்) தோராயமாகக் கணக்கிடுக. மேலும் படகு நிலையான தண்ணீரில் செல்கிறது எனக் கருதுக. (√3 = 1.732)

14. 1800 மீ உயரத்தில் பறக்கும் ஒரு விமானத்திலிருந்து ஒரே திசையில் விமானத்தை நோக்கிச் செல்லும் இரு படகுகள் பார்க்கப்படுகிறது. விமானத்திலிருந்து இரு படகுகளை முறையே 60° மற்றும் 30° இறக்கக்கோணங்களில் உற்று நோக்கினால், இரண்டு படகுகளுக்கும் இடைப்பட்டத் தொலைவைக் காண்க. (√3 = 1.732)

15. ஒரு கலங்கரை விளக்கத்தின் உச்சியிலிருந்து எதிரெதிர் பக்கங்களில் உள்ள இரண்டு கப்பல்கள் 30° மற்றும் 60° இறக்கக்கோணத்தில் பார்க்கப்படுகின்றன. கலங்கரை விளக்கத்தின் உயரம் h மீ. இரு கப்பல்கள் மற்றும் கலங்கரை விளக்கத்தின் அடிப்பகுதி ஆகியவை ஒரே நேர்கோட்டில் அமைகின்றன எனில், இரண்டு கப்பல்களுக்கு இடைப்பட்ட தொலைவு 4h/√3 மீ என நிரூபிக்க.

16. 12 மீ உயரமுள்ள கட்டிடத்தின் உச்சியிலிருந்து மின்சாரக் கோபுர உச்சியின் ஏற்றக்கோணம் 60° மற்றும் அதன் அடியின் இறக்கக்கோணம் 30° எனில், மின்சாரக் கோபுரத்தின் உயரத்தைக் காண்க.

17. ஒரு கோபுர உச்சியின் மீது 5 மீ உயரமுள்ள கம்பம் பொருத்தி வைக்கப்பட்டுள்ளது. தரையில் உள்ள 'A' என்ற புள்ளியிலிருந்து கம்பத்தின் உச்சியை 60° ஏற்றக்கோணத்திலும், கோபுரத்தின் உச்சியிலிருந்து 'A' என்ற புள்ளியை 45° இறக்கக்கோணத்திலும் பார்த்தால், கோபுரத்தின் உயரத்தைக் காண்க. (√3 = 1.732)

18. 13 மீ உயரமுள்ள ஒரு மரத்தின் உச்சியிலிருந்து மற்றொரு மரத்தின் உச்சி மற்றும் அடியின் ஏற்றக்கோணம் மற்றும் இறக்கக்கோணம் முறையே 45° மற்றும் 30° எனில், இரண்டாவது மரத்தின் உயரத்தைக் காண்க. (√3 = 1.732)

19. 66 மீ உயரமான அடுக்குமாடிக் குடியிருப்பின் உச்சியிலிருந்து ஒரு விளக்குக் கம்பத்தின் உச்சி மற்றும் அடியின் ஏற்றக்கோணம் மற்றும் இறக்கக்கோணம் முறையே 60°, 30° எனில் பின்வருவனவற்றைக் காண்க:
(i) விளக்குக் கம்பத்தின் உயரம்.
(ii) விளக்குக் கம்ப உயரத்திற்கும் அடுக்குமாடியின் உயரத்திற்கும் இடையேயுள்ள வித்தியாசம்.
(iii) விளக்குக் கம்பத்திற்கும் அடுக்குமாடிக்கும் இடையே உள்ள தொலைவு. (√3 = 1.732)

20. கடலின் நீர் மட்டத்திலிருந்து 40 மீட்டருக்கு மேலே உள்ள ஒரு கப்பலின் மேல் பகுதியில் நின்று கொண்டிருக்கிற ஒருவர், குன்றின் உச்சியை 60° ஏற்றக்கோணத்திலும் அடிப்பகுதியை 30° இறக்கக்கோணத்திலும் காண்கிறார் எனில், கப்பலிலிருந்து குன்றுக்கு உள்ள தொலைவையும், குன்றின் உயரத்தையும் காண்க. (√3 = 1.732)


10th Study Materials

10th Std Study Materials

10th Tamil Study Materials

10th English Study Materials

10th Maths Study Materials

10th Science Study Materials

10th Social Science Study Materials


10th Question Papers & Answer Keys

10th Quarterly Exam Question Papers and Answer Keys

10th Half Yearly Exam Question Papers and Answer Keys

10th Public Exam Question Papers and Answer Keys

10th First Revision Test Question Papers and Answer Keys

10th Second Revision Test Question Papers and Answer Keys

10th Third Revision Test Question Papers and Answer Keys

10th First MidTerm Test Question Papers and Answer Keys

10th Second MidTerm Test Question Papers and Answer Keys

Important Links

10th Syllabus

10th Lesson Plans

10th Monthly Test & Unit Test

Tamilnadu 10th Time Table | SSLC Exam Time table

Post a Comment