10th Maths Unit 1 Important 5 Mark Questions | உறவுகளும் சார்புகளும்

Download Samacheer Kalvi 10th Maths Unit 1 (Relations and Functions) important 5 mark questions in Tamil medium. Get top-predicted public exam problem

பொதுத்தேர்வில் முழு மதிப்பெண்கள் பெற உதவும் 10th Maths Unit 1 Important 5 Mark Questions Tamil Medium வழிகாட்டிக்கு உங்களை வரவேற்கிறோம். கணிதப் பாடத்திட்டத்தின் முதல் அத்தியாயமான உறவுகளும் சார்புகளும் பகுதியிலிருந்து கேட்கப்படும் 5-மதிப்பெண் வினாக்கள், தேர்வில் எளிதாக மதிப்பெண் குவிக்கக்கூடிய மிக முக்கியமான பகுதியாகும். இதில் சார்புகளின் சேர்ப்பு, அம்புக்குறி படங்கள், மற்றும் அட்டவணை கணக்குகள் போன்ற பொதுத்தேர்வில் அடிக்கடி கேட்கப்படும் (Repeated Questions) முக்கிய வினாக்கள் மற்றும் எடுத்துக்காட்டுகளைத் தொகுத்து வழங்கியுள்ளோம். இறுதி நேரத் திருதலுக்குப் பயன்படும் இந்தத் தொகுப்பைப் பயிற்சி செய்து, உங்கள் முதல் அத்தியாயப் பகுதியில் முழு மதிப்பெண்களை இப்போதே உறுதி செய்திடுங்கள்!


10th Maths Unit 1 Important 5 Mark Questions | உறவுகளும் சார்புகளும்

அலகு-1 (உறவுகளும் சார்புகளும்)

UNIT - 1 (Relations and Functions)
Important 5 Marks Questionss

1. A = {x ∈ ℕ | 1 < x < 4}, B = {x ∈ W | 0 ≤ x < 2} மற்றும் C = {x ∈ ℕ | x < 3} எனில், A × (BC) = (A × B) ∪ (A × C) என்பனவற்றைச் சரிபார்க்க.

2. A = {x ∈ ℕ | 1 < x < 4}, B = {x ∈ W | 0 ≤ x < 2} மற்றும் C = {x ∈ ℕ | x < 3} எனில், A × (BC) = (A × B) ∩ (A × C) என்பனவற்றைச் சரிபார்க்க.

3. A என்பது 8-ஐ விடக் குறைவான இயல் எண்களின் கணம், B என்பது 8-ஐ விடக் குறைவான பகா எண்களின் கணம் மற்றும் C என்பது இரட்டைப்படை பகா எண்களின் கணம் எனில், கீழ்கண்டவற்றைச் சரிபார்க்க:
(i) (AB) × C = (A × C) ∩ (B × C)
(ii) A × (B - C) = (A × B) - (A × C)

4. A = {1, 2, 3, 7} மற்றும் B = {3, 0, -1, 7} எனில், பின்வருவனவற்றில் எவை A-லிருந்து B-க்கான உறவுகளாகும்?
(i) R1 = {(2, 1), (7, 1)}
(ii) R2 = {(-1, 1)}
(iii) R3 = {(2, -1), (7, 7), (1, 3)}
(iv) R4 = {(7, -1), (0, 3), (3, 3), (0, 7)}

5. கொடுக்கப்பட்ட உறவுகள் ஒவ்வொன்றையும் (1) அம்புக்குறி படம் (2) வரைபடம் (3) பட்டியல் முறையில் குறிக்க.
(i) {(x, y) | x = 2y, x ∈ {2, 3, 4, 5}, y ∈ {1, 2, 3, 4}}
(ii) {(x, y) | y = x + 3, x, y ஆகியவை இயல் எண்கள் < 10}

6. A = {1, 2, 3, 4} மற்றும் B = {2, 5, 8, 11, 14} என்பன இரு கணங்கள் என்க. f: AB எனும் சார்பு f(x) = 3x - 1 எனக் கொடுக்கப்பட்டுள்ளது. இச்சார்பினைக் கொண்டு:
(i) அம்புக்குறி படம்
(ii) அட்டவணை
(iii) வரிசைச் சோடிகளின் கணம்
(iv) வரைபடம் ஆகியவற்றைக் குறிக்க.

7. f: ℕ → ℕ என்ற சார்பானது f(x) = 3x + 2, x ∈ ℕ என வரையறுக்கப்பட்டால்:
(i) 1, 2, 3 -யின் நிழல் உருக்களைக் காண்க
(ii) 29 மற்றும் 53-யின் முன் உருக்களைக் காண்க.
(iii) சார்பின் வகையைக் காண்க.

8. சார்பு f: ℝ → ℝ ஆனது
f(x) =
  • 2x + 7,   x < -2
  • x2 - 2,   -2 ≤ x < 3
  • 3x - 2,   x ≥ 3
என வரையறுக்கப்பட்டால், (i) f(4)    (ii) f(-2)    (iii) f(4) + 2f(1)    (iv) [f(1) - 3f(4)]/f(-3) ஆகியவற்றின் மதிப்புகளைக் காண்க.

9. f: AB என்ற சார்பானது f(x) = x/2 - 1 என வரையறுக்கப்படுகிறது. இங்கு, A = {2, 4, 6, 10, 12}, B = {0, 1, 2, 4, 5, 9}. சார்பு f-ஐ:
(i) வரிசைச் சோடிகளின் கணம்
(ii) அட்டவணை
(iii) அம்புக்குறி படம்
(iv) வரைபடம் ஆகியவற்றால் குறிக்க.

10. ஒரு சார்பு f ஆனது f(x) = 2x - 3 என வரையறுக்கப்பட்டால்:
(i) [f(0) + f(1)]/2 -ஐக் காண்க.
(ii) f(x) = 0 எனில், x ஐக் காண்க.
(iii) f(x) = x எனில், x ஐக் காண்க.
(iv) f(x) = f(1 - x) எனில், x ஐக் காண்க.

11. f என்ற சார்பானது
f(x) =
  • x + 2;   x > 1
  • 2;   -1 ≤ x ≤ 1
  • x - 1;   -3 < x < -1
என வரையறுக்கப்பட்டால், (i) f(3)    (ii) f(0)    (iii) f(-1.5)    (iv) f(2) + f(-2) ஆகியவற்றின் மதிப்புகளைக் காண்க.
12. f: [-5, 9] → ℝ என்ற சார்பானது பின்வருமாறு வரையறுக்கப்படுகிறது:
f(x) =
  • 6x + 1,   -5 ≤ x < 2
  • 5x2 - 1,   2 ≤ x < 6
  • 3x - 4,   6 ≤ x ≤ 9
எனில், பின்வருவனவற்றைக் காண்க:
(i) f(-3) + f(2)
(ii) f(7) - f(1)
(iii) 2f(4) + f(8)
(iv) [2f(-2) - f(6)]/[f(4) + f(-2)]

13. t என்ற சார்பானது செல்சியஸில் (C) உள்ள வெப்பநிலையையும், பாரன்ஹீட்டில் (F) உள்ள வெப்பநிலையையும் இணைக்கும் சார்பாகும். மேலும் அது t(C) = F என வரையறுக்கப்பட்டால், (இங்கு F = 9/5C + 32):
(i) t(0)
(ii) t(28)
(iii) t(-10)
(iv) t(C) = 212 ஆக இருக்கும்போது C-ன் மதிப்பு
(v) செல்சியஸ் மதிப்பும் பாரன்ஹீட் மதிப்பும் சமமாக இருக்கும்போது வெப்பநிலை ஆகியவற்றைக் கண்டறிக.

14. f(x) = 3x + 1, g(x) = x + 3 ஆகியவை இரு சார்புகள். மேலும் gff(x) = fgg(x) எனில் x-ஐக் காண்க.

15. f(x) = 2x + 3, g(x) = 1 - 2x மற்றும் h(x) = 3x எனில், f ∘ (gh) = (fg) ∘ h என நிறுவுக.

16. f(x) = 3x - 2, g(x) = 2x + k மற்றும் fg = gf எனில், k-யின் மதிப்பைக் காண்க.

17. f(x) = 2x - k, g(x) = 4x + 5 எனில், fg = gf என அமையும் k-யின் மதிப்பைக் காண்க.

18. f(x) = 3x + 2, g(x) = 6x - k மற்றும் fg = gf எனில் k-யின் மதிப்பைக் காண்க.

19. கொடுக்கப்பட்ட f(x), g(x), h(x) ஆகியவற்றைக் கொண்டு (fg) ∘ h = f ∘ (gh) எனக் காட்டுக.
f(x) = x - 1, g(x) = 3x + 1 மற்றும் h(x) = x2

20. கொடுக்கப்பட்ட f(x), g(x), h(x) ஆகியவற்றைக் கொண்டு (fg) ∘ h = f ∘ (gh) எனக் காட்டுக.
f(x) = x2, g(x) = 2x மற்றும் h(x) = x + 4

21. கொடுக்கப்பட்ட f(x), g(x), h(x) ஆகியவற்றைக் கொண்டு (fg) ∘ h = f ∘ (gh) எனக் காட்டுக.
f(x) = x - 4, g(x) = x2 மற்றும் h(x) = 3x - 5.


10th Study Materials

10th Std Study Materials

10th Tamil Study Materials

10th English Study Materials

10th Maths Study Materials

10th Science Study Materials

10th Social Science Study Materials


10th Question Papers & Answer Keys

10th Quarterly Exam Question Papers and Answer Keys

10th Half Yearly Exam Question Papers and Answer Keys

10th Public Exam Question Papers and Answer Keys

10th First Revision Test Question Papers and Answer Keys

10th Second Revision Test Question Papers and Answer Keys

10th Third Revision Test Question Papers and Answer Keys

10th First MidTerm Test Question Papers and Answer Keys

10th Second MidTerm Test Question Papers and Answer Keys

Important Links

10th Syllabus

10th Lesson Plans

10th Monthly Test & Unit Test

Tamilnadu 10th Time Table | SSLC Exam Time table

Post a Comment